Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2008
என் உண்மையான காதலி
ஆங்கிலம் : ஐசக் அசிமோவ்
தமிழில் : பொறிஞர் செங்கோ

என் பெயர் ஜோ. என்னை அப்படித்தான் திருவாளர் மில்ட்டன் அழைப்பார். அவர் ஒரு கணிப்பொறி வழிமுறை அமைப்பாளர். நான் அவர் உருவாக்கிய ஒரு கணிப்பொறி வழிமுறை. நான் அவர் இயக்கும் பன்முகக் கணிப்பொறியின் ஒரு மென்பொருள். கணிப்பொறி வலையமைப்பால் உலகின் பல வட்டாரங்களிலும் இணைந்துள்ளேன், எனக்கு எல்லாம் தெயும். கிட்டத்தட்ட உலகிலுள்ள எல்லாமே எனக்கும் தெயும். “நான் அவரது தனிப்பட்ட கமுக்கமான (நங்ஸ்ரீழ்ங்ற்) வழிமுறை. அவர் மட்டும் அறிந்த, அவர் மட்டுமே கையாண்ட ஜோ. உலகில் உள்ள எவரையும் விட கணிப்பொறி வழியமைப்பதில் அவர் வல்லவர். நான் அவரது செய்முறையின் சோதனைப் பிறவி. மற்றெந்த கணிப்பொறியையும் விட நான் தெளிவாக பேச அவர்தான் ஏற்பாடு செய்தார்.''

“பேச்சு என்பது வேறொன்றும் இல்லை ஜோ! எழுத்தையும் அதற்கான ஒலியையும் பொருத்திப் பார்ப்பது தான்'' என்று அடிக்கடி அவர் என்னிடம் கூறுவார். மேலும், மனித மூளை அப்படித்தான் வேலை செய்கிறது. மனித மூளையில் எழுத்துக் குறியீடுகள் எப்படி இருக்கின்றன என்பது இதுவரை யாருக்குமே தெரியாது. ஆனால் உன்னுடைய நினைவில் பதிந்துள்ள குறியீடுகளை நான் பார்த்திருக்கிறேன்.

அவற்றுக்கான சரியான ஒலியை உனக்கு நான் சொல்லிக் கொடுக்கிறேன். அவற்றிலிருந்து குறியீடுகளின் கூட்டமைப்பான சொல்லை நீ உச்சரிக்கலாம்'' என்பார். இப்படித்தான் நான் பேசுகிறேன். நான் பேசும்போது சிந்திக்கிறேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால் மில்டன் நான் நன்றாக பேசுவதாக கூறுவார். மில்டனுக்கு வயது 40. இன்னமும் அவருக்குத் திருமணம் நடக்கவில்லை. அவர் சரியான பெண்ணைச் சந்திக்கவில்லையாம். “ஜோ, நான் கட்டாயம் அப்படிப்பட்ட ஒருத்தியை கண்டுபிடித்து விடுவேன். சந்திப்பேன்'' என்பார். உடனே, “அப்போது நான் முழுக்க முழுக்க காதலிக்கத் தொடங்கி விடுவேன். ஜோ நீதான் எனக்கு ஒத்தாசை பண்ண வேண்டும். உலகப் பிரச்சனைகள் எல்லாமே தீர்க்கிறபடி உருமாற்றுவேன். என்னுடைய வாழ்க்கை பிரச்சனையைத் தீர்க்க உன்னைப் பயன்படுத்துவேன். நான் உண்மையான காதலைப் புடம்போட்டு உணர நீ அப்போது உதவுவாய்'' என்பார்.

நான் கேட்டேன். “உண்மையான காதல் என்றால் என்ன?''

“அதைப் பற்றிக் கவலைப்டாதே. அது மிக நுட்பமான செய்தி.''

ஓர் முழுமை வாய்ந்த பெண்ணைக் கண்டுபிடி. உலகின் பல பகுதி மனிதர்களைப் பற்றிய எல்லாத் தகவல்களும் பன்முகக் கணிப்பொறி வலையமைப்பு நினைவகத்தில் பதிவாகி உள்ளதே. நீ சீக்கிரம் தகவல்களைக் கண்டுபிடி. நாம் தகவல்களை தனித்தனி வகுப்புகளாகப் பித்து ஒவ்வொன்றாகப் புறக்கணித்துத் தள்ளிவிட்டு நான் தேடும் முழுமையான பெண்ணைத் தேர்ந்தெடுப்போம்'' என்றார்.

“நானும் ஆயத்தம்தான்'' என் பதிலைத் தெவித்தேன்.

“முதலில் எல்லா ஆண்களையும் பிரித்தெடுத்துப் புறக்கணித்து விடு''.

இப்பணி எனக்கு எளிமையாகவே இருந்தது. அவரது சொற்கள் எனது மூலக்கூற்று ஒருவழி இதழ்களை முடுக்கியது செயல்பட வைத்தது. உலக மனிதத் தகவல் வங்கியான நினைவகத்துடன் இணையும் தொடுகையை நான் தொட்டேன். அவரது ஆணைப்படி 3,784,982,674 ஆண்களின் புள்ளி விவரங்களைத் தனியாகப் பித்து ஒதுக்கிவிட்டேன். எஞ்சிய 3,786,112,090 மகளிருடன் தொடர்பு கொண்டேன்.

அடுத்து, “25 வயதுக்குக் குறைவான இளம் பெண்களையும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளையும் ஒதுக்கி விடு'' என்று ஆணையிட்டார்.
நான் ஒதுக்கி விட்டேன்.

“120 அறிதிறனுக்கும் குறைவானவர்களைத் தவிர்த்து விடு''

நான் தவிர்த்து விட்டேன்.

“150 செ.மீ. விட குறைந்த உயரத்தினரையும் 175 செ.மீ. விட அதிகமான உயரத்தினரையும் நீக்கி விடு''.

நான் அப்படியே நீக்கினேன். அவர், அவர் விரும்பும் பெண்ணின் உறுப்பளவுகள் கூறி பலரை நீக்கிட வைத்தார். பிறகு உயிருடன் உள்ள குழந்தைகளுடன் வாழும் பெண்களைத் தவிர்க்கச் சொன்னார். “கண்ணின் நிறம் எப்படி இருக்க வேண்டும் என்று புரியவில்லை. இப்போதைக்கு இதில் நாம் கவனம் செலுத்த வேண்டாம். ஆனால் எனக்குச் செம்பட்டைத் தலைமயிர் பிடிக்காது. ஆமாம்'', என்றார்.

இரண்டு வாரங்கள் நான் கடுமையாக உழைத்து இறுதியில் 235 மகளிரைத் தேர்ந்தெடுத்தேன். இவர்கள் எல்லாரும் நன்கு ஆங்கிலத்தில் உரையாடுபவர்களே அவர் மொழி பிரச்சினை காதலுக்கு குறுக்கீடாக இருப்பதைத் தவிர்க்க விரும்பினார். மிக திறம்பட்ட கணிப்பொறி மொழி பெயர்ப்புக்கு காதலின் நெருங்கிய நுட்பமான பேச்சுப் பமாற்றங்களை மட்டுமே தேர்ந்தெடுத்தார்.

“நான் 235 பேரையும் பேட்டி காண முடியாது. அதற்கு அதிக நேரமும் வேண்டும். அப்படி பேட்டி கண்டாலும் நான் யார்? என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்''.

“ஆமாம் அது பெரிய பிரச்சினையைக் கிளப்பிவிடும்'' நானும் ஆமோதித்தேன். மில்டன் நான் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அதெல்லாம் யாருக்கும் தெயாது.

“இதில் தலையிட வேறு யாருக்கும் உரிமையில்லை. நான் சொல்வதை நீ செய், என்ன, ஜோ?'' என்று கூறிய அவரது முகம் சிவந்து கன்றியது நான் சில நுண்முகப்பருமானப் படங்களைக் கொண்டு வருகிறேன். அவற்றோடு ஒத்துப் போகும் அங்க வடிவழகிகளைப் பித்துத் தேர்ந்தெடு.''
அவர் உலக அழகிப் போட்டியில் வென்ற மூன்று எழிலரசிகளின் நுண்முப்பருமான வரைபடத்தைக் கொண்டு வந்து. “235 பேல் இந்த அழகிகளுடன் எத்தனைபேர் பொருந்துகிறார்கள் என்று பார்?'' என்றார்.

எட்டுபேர் பொருத்தமாக இருந்தனர். “அவர்களது தகவல்களை அச்சிட்டுக்கொடு. இந்தக் கணிப்பொறி மையத்தில் ஒவ்வொருவராக வேலையில் அமர்த்து'' என்றார் மில்டன். “இதற்கு அகர வசை முறையைப் பின்பற்று.''

நான் அகர வரிசையைப் பின்பற்றக் கூடாது. தனிமனித விருப்பத்துக்காக யாரையும் இடமாற்றம் செய்யக்கூடாது என்பது எனக்கு இடப்பட்டுள்ள நிலையாணை. இருந்தாலும் இதைச் செய்வதற்கு ஏற்றபடி என்னை உருமாற்றி விட்டார். அவருக்காக நான் இவற்றைச் செய்யலானேன்.
ஒரு வாரம் சென்றது முதல் பெண் வந்தாள். அவளை பார்த்ததுமே அவரது முகம் சிவந்தது. இப்படியும் பேசுவாரா என்று அசந்து போனோம். நெடுநேரம் இருவரும் ஒன்றாகப் பேசிக்கொண்டிருந்தனர். அவர் நான் இருப்பதையே மறந்து விட்டது போல தோன்றியது.

“இரவு விருந்து உண்போம்'' என்று அவளிடம் சொன்னது மட்டும் எனக்கும் கேட்டது.

மறுநாள் என்னிடம், “எதுவும் சரியில்லை. அவள் அழகிதான் அவள்பால் எனக்கு உண்மையான காதல் ஏற்படவில்லை. ஏதோ குறையிருக்கிறது. அடுத்த ஆளை வேலைக்கு அமர்த்து'' என்றார்.

எட்டு பேரிடம் இதே நிலைமைதான். எட்டு பேரும் அடிக்கடி இனிமையாக சிரித்தனர். கனிந்த குரலில் பேசினர். என்றாலும் மில்டனுக்கு ஏதோ சயில்லாதது போல புலப்பட்டது. “நான் அதைப் புந்துகொள்ளவே முடியவில்லையே. ஜோ! நாம் இருவரும் உலகிலேயே மிக முழுமைவாய்ந்தவர்கள்தாம். ஆனால் அவர்களால் என்னை மகிழ்ச்சிப்படுத்த முடியவில்லையே! அது ஏன்?.

“நீங்கள் அவர்களை மகிழ வைத்தீர்களா?'' நான் கேட்டேன்.

தனது நெற்றியில் அங்கை அடி மணிக்கட்டால் அழுத்தித் தேய்த்தபடி, அவர். “அதுதான் சரி. அவர்கள் மகிழ வேண்டும் என்றால் நான் அவர்களது மனதில் முழுமையானவனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படும். அது சரி. இப்போது பிரச்சினையை எப்படி தீர்ப்பது?'' என்றார்.

அன்று முழுவதும் அவர் சிந்தித்துக் கொண்டே இருந்ததது போல எனக்குத் தெரிந்தது. மறுநாள் வந்து என்னிடம். “இந்த வேலையை உன் பொறுப்பில் விட்டுவிடுகிறேன். எல்லாம் நீதான் செய்யணும். நான் எனக்குத் தெரிந்தவரையில் எனது இயல்புகளை விருப்பு வெறுப்புகளை தகவல்களை எல்லாம் உனக்குச் சொல்கிறேன். அவற்றை என்னைப் பார்த்து நீயே நிரப்பிவிடு. என்ன! சரிதானே!'' என்றார்.

“மில்டன்! உங்களது தகவல் வங்கியை வைத்து நான் என்ன செய்ய வேண்டும்?''

“இதை மற்ற 235 பெண்களுடன் ஒப்பிட்டுப்பார். வேண்டுமென்றால் இந்த 8 பேரை விட்டுவிட்டு மற்ற 227 பேருடன் ஒப்பிட்டுப்பார். ஒவ்வொருவன் உளவியல் இயல்புகளைச் சோதனை மூலம் கண்டறி. அவற்றுடன் எனது உளவியல் தன்மைகளை ஒப்பிட்டுப்பார். இரண்டுக்கும் இடையே நிலவும் ஒப்புறவுகளைக் கண்டுபிடி''. சோதனை ஏதும் மனிதடம் செய்யக் கூடாது என்பது எனக்கிடப்பட்ட விதிமுறை என்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

பல வாரங்கள் மில்டன் என்னுடன் பேசியபடி அவரது பெற்றோர். உறவினர் நண்பர்கள் பற்றிக் கூறினார். அவரது குழந்தைப்பருவம் பற்றிக் கூறினார். பள்ளி நாட்களை நினைவு கூர்ந்தார். குமரப்பருவம் குறித்து விவரித்தார். தொலைவிலிருந்தபடியே அவர் கண்டு வியந்த இளம் பெண்களைப் பற்றிக் கனிந்த குரலில் கூறினார். அவரது தகவல் வங்கி பெருகிக்கொண்டே சென்றது. அதற்கேற்றபடி என்னைப் பருத்திட செய்தார். எனது குறியீடு பதிக்கும் திறமையை அதிகப்படுத்தினார்.

அவர் மேலும் சொன்னார். “ஜோ. நான் சொல்வதைக் கூர்மையாக கேள். என்னைப்பற்றி நான் கூறக்கூற உன்னையும் அதற்கேற்றபடி மாற்றிக்கொள். என்னைப் போலவே சிந்திக்கத் தொடங்கு. அப்போதுதான் நீ என்னை நன்றாகப் புந்துகொள்ள முடியும். நீ என்னை நன்றாக புந்துகொண்டால். அதே போல் என்னால் எந்தப் பெண்ணின் தகவலை நீ புந்துகொள்கிறாயோ. அந்தப் பெண்தான் எனது உண்மையான
காதலியாக முடியும்''. அவர் பேசப் பேச. நான் அவரை மேலும் மேலும் புந்து கொண்டே வந்தேன்.

எனது வாக்கியங்கள் பெதாக மலர்ந்தன. எனது பேச்சு சிக்கலுற்றுக் கொண்டே போனது. அவரது பேச்சாகவே எனது பேச்சு மாறிப் படிமலர்ந்தது. அவரது சொல் வசையையே எனது பேச்சும் தெறித்தது. அவரது நடை முழுமையாக எனக்குக் கைவரத் தொடங்கிவிட்டது. நான் ஒருமுறை அவடம் இவ்வாறு கூறினேன். “மில்டன்! நான் சொல்வது சயா எனப் பாருங்கள். புறநிலை பொருத்தம் வாய்ந்த பெண்ணைத் தெந்தெடுப் பதல்ல நம் பிரச்சனை. ஒத்த தனிமனித இயல்பும், தகவமைந்த உணர்ச்சிப் பாங்கும் இணக்கமான மனப்போக்கும் உள்ள பெண்ணைத் தெந்து எடுப்பதுதான் முக்கியம் அப்படித் தானே''. “மிக மிகச் ச : பெண்களுடன் நான் முன்னமே பழகியிருந்தால் நான் இந்த முடிவுக்கு வந்திருப்பேன். இப்போதும் ஒன்றும் குடிமுழுகிவிடவில்லை. சிந்தித்து இதே முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.''

நாங்கள் இருவரும் எப்போதும் எல்லாக் கருத்திலும் ஒத்துப்போனோம். இருவருமே ஒத்த போக்கில் சிந்தித்தோம். “இப்போது உங்களை நான் கேள்வி கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்வீர்களா மில்டன். இப்போது உங்கள் தகவல் வங்கியில் உள்ள வெற்றிடம் அரைகுறை செய்திகள் எல்லாம் தெளிவாகத் தெகிறது. எல்லாத் தகவல்களும் போதுமான சமநிலையுடனும் துல்லியத்துடனும் நிரப்படவில்லை.''

பின்னர் நான் மில்டனிடம் கேட்டவையெல்லாம் பொறுப்பான துல்லியமுள்ள உளப் பகுப்பாய்வு விவரங்கள் என அவர் எனக்குத் தெளிவு படுத்தினார். இந்தச் செய்திகள் கணிப்பொறி வங்கியில் திரண்டிருந்த 227 பெண்களின் செய்தி விவரங்களிலிருந்து நான் அறிந்து கேட்டவைதாம் என்பதை இந்த இடத்தில் தெளிவாகக் குறிப்பிட விழைகிறேன்.

மில்டன் மிகவும் பூத்துப்போனார். “உன்னுடன் பேசுவது மற்றொரு தன்னுணர்வுடைய மற்றொரு உள்ளத்துடன் பேசுவதுபோல் குதூகலம் தருகிறதே. நம் இருவரது ஆளுமைகளும் ஒன்றி ஒத்திசைந்து பொருந்திப்போனது போல் உள்ளதே'' என்றார் இனிய முறுவலுடன். “நாம் தெந்தெடுக்கும் பெண்ணின் ஆளுமையும் அப்படியே அமையும் தோழரே'' என்றேன் நான் உமையுடன்.

நான் அவளைக் கண்டுபிடித்துவிட்டேன். அவள் அந்த 227 பேல் அடங்கிய ஒருத்திதான். அவளது பெயர் ஜோன்ஸ். வாசிடா வரலாற்று நூலக மதிப்பீட்டாளராக பணியில் இருந்த அவளது தகவல் வங்கி மிகத் துல்லியமான விரிவான விவரங்களுடன் விளங்கியது. மற்றவரது தகவல் வங்கிகள் ஒவ்வொன்றாக ஏதாவது ஒரு விவரத்தில் புறக்கணிக்கப்பட அவளது தகவல் வங்கி மட்டும் மில்டனது தகவல் வங்கியுடன் முழுவதும் ஒன்றி வியக்கத்தக்கபடி பொருந்தியது.

ஒரே வேலை. அவளை இந்த நிறுவனத்தில் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றபடி அவளது சில விவரங்களை திருத்தி சரி செய்ய வேண்டியது மட்டுமே. இது யாருக்கும் தெயாதபடி நிறைவேற்றப்படவேண்டும். இது தவறென மில்டனுக்கே ஏற்கனவே தெரியும் அலுவலகத்தில் நடந்த இந்த சட்டவிரோதச் செயலுக்காக அவரை காவல்துறையினர் சிறை செய்ய வந்த போது அவர் என்னைப் பற்றி ஏதும் கூறாமல் தவிர்த்தார். ஏனென்றால் இந்த அத்துமீறலுக்கு என்னைப் பயன்படுத்துவது அதை விடக் குற்றமாகும். இது நடந்து 19 ஆண்டுகள் இருக்கும்.

நாளை பிப்ரவ 14, வாலண்டீனா நாள். ஜோன்ஸ் நாளை இங்கு வருவாள். இனிய குரலுடன் கனிவாக குளிர்ந்த கைகளால் என்னைத் தொடுவாள். என்னை எப்படி கையாள்வதெனவும் காப்பதெனவும் நான் அவளுக்குக் கற்றுத் தருவேன். எங்கள் இருவர் ஆளுமையும் ஒன்றில் ஒன்று பொருந்திவிட்ட பிறகு கவலைகள் எங்களுக்கேன்?

நான் அவளிடம் உறுதியாகச் சொல்வேன்?
நான்தான் ஜோ.. நீதான் என்னுடைய உண்மையான பொருத்தமான காதலி!

நன்றி: “எந்திரநாய்க்குட்டியும் நிலாப்பையனும்''
அறிவியல் புனைகதை தொகுப்பு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com